மை....மை.....வறுமை
வேதா.
இலங்காதிலகம்,ஓகுஸ்,
டென்மார்க்.
இல்லாமை
தரும்
நிலைமை
வறுமை!
பெரும்
கொடுமை!
வெறுமை!
இதிலில்லை
பெருமை!
உண்மை
உழைப்பு
வறுமை
வராமை
காக்கும்!
முயலாமை
இயலாமை
இணைதலே
வறுமை.
தனிமை
ஒரு
வகை
வறுமை.
இனிமை
வார்த்தை
பேசாமை,
அன்பின்மை
வேண்டாத
வறுமை.
ஆறியாமை,
அறிய
மனமில்லாமை,
ஈயாமை,
ஆதரவு
இல்லாமை,
உண்மை
பேசாமையும்
வறுமை.
மை
போன்றிவை
கருமைத்
தன்மை
கொண்டு
மேன்மை,
பெருமை
அழிக்கும்
உண்மை.
செழுமை
அழிக்குமிச்
சிறுமை
வராமை
காத்தல்
வலிமை.
வறுமை
தடுத்தல்
மேன்மை.
kovaikkavi@gmail.com
|