மழை நாளின் மிச்சம்...!

தினைக்குளம் கா.ரமேஷ்,பரமக்குடி.

கை வலிக்குமென்றென்னி
காதலோடு குடையை நான் கேட்க
வேண்டாமென முறைத்தாய்
வேண்டும் என்றே என்னை
வெட்க மழையில் நனைத்தாய்....

அவயங்கள் பட்டுவிடுமோ என
அதீதஎச்சரிக்கையில்
அச்சத்தோடு நான் க்க‌...
நீ
நெருங்கி ந்து ந்து
நெருப்பு சுவாசத்தால்
நெஞ்சத்தை குலைத்தாய்....

ழையின் குளிர்
திற்க்குள் இருக்க
உடலின் குளிரையெல்லாம்
ஓரக்கண்ணால் விரட்டி அடித்தாய்...

மழைநீரை கையில் ஏந்தி
மாறி மாறி என்மேல் எரிந்து
தண்ணீரை கூட கை வைத்து
பன்னீராக்கித் தந்தாய்....

த்தகொலுசு த்தம்
வென்றழை நீரில்
த்தம் ஓய்ந்ததுபோல்
த்தஎன் தினை
தை தைத்தஉன் விரல் தொட்டு
யுத்தம் நிறுத்தி கடந்தாய்.....

சத்தமில்லாமல் என்மனதில்
சாகசங்கள் பலபுரிந்தாய்  - ஓர்நாள்
சந்தியில்நின்று ஏதுமில்லை எனசொல்லி
சாதுர்யமாய் எனை பிரிந்தாய்...

ஆனால் நான்
கொஞ்சம் நேற்று பொழிந்த
கோடை சிறு மழைக்கே
கலையாதஉன்நினைவுகளில்
களிப்போடு நனைந்து வந்தேன் - இப்படி
மொத்தமாய் கொட்டிதீர்த்த மழைகளில்
மிச்சமாய் நின்றது எனது காதலும்..
உனைப்பற்றிய எனது கவிதைகளும்தான்...!

                


kramesu@gmail.com