ஹைக்கூ கவிதைகள்

ஆ.முத்துவேல்

உயிர் மெய்,
எழுத்துக்கும் முன் எழுத்து,
அம்மா ...

அம்புகுறி இட்டு காட்டும்,
வழிகாட்டி,
அப்பா ...

உச்சரிக்கும்போது ஒட்டாதது,
உள்ளத்தில் ஒட்டும் ஒரே உறவு,
தங்கை ..

தன் மூச்சு காற்றை,
பங்கிட்டு கொடுக்கும் கலியுக கர்ணன்,
அண்ணன் ...

ஒரு விழி அழுதால்,
மறுவிழி கலங்கும் உறவு,
தம்பி ...

இதயங்களை இடம் மாற்றிக்கொள்ளும்,
பண்ட மாற்று முறை போல,
காதலி ...

என் சுகத்தையும்,
துக்கத்தையும் தாங்கிசெல்லும் தபால் பெட்டி,
மனைவி ...

என் துன்பத்தை,
தாங்கும் சுமை தாங்கி,
நண்பன் ...



muthuvel_a2000@yahoo.co.in