அறிவு தரும் ஆனந்தம் (குழந்தைகளுக்கான பாடல்)

வித்யாசாகர்

லகே உலகே காது கொடு
ஒரு
குழந்தை படிக்கப் பாதைக்கொடு
மனமே
மனமே பாடுபடு படிப்பால்
வாழ்வை
வென்று எடு

படிக்கப் படிக்க வளர்ந்துவிடு
எம்
வறுமைக் கோட்டையழித்துவிடு
ஏழை
எளியவர் துயரத்தை அறிவுக்
கண்ணைத்
திறந்தே யொழித்துவிடு

படிப்பு கொடுக்கும் தைரியத்தில்
பட்டம்
சுமந்து  காட்டிவிடு
படிப்பால்
நாளை உலகத்தின்
பசுமை
போற்ற முயற்சி யெடு

சேர்த்து சேர்த்து வைத்த பணம்
வீடு
போனால் போனதுதான்
படித்து
உழைத்துப் பெற்ற கல்வி
ஒரு
கடுகும் குறையாது  காத்திடுமே

மிரட்டி மிரட்டிப் போகின்றார் உலகை
கல்லார்
மிரட்டி வாழ்கின்றார்
என்னாளென்று
 தெரியாது வெளிச்சம்
எம்
கல்வியாலன்று பிறந்திடுமே

பாடம் சுமக்கும் மாணவரே
காலம்
சுமக்க வாழ்பவரே  
உடம்பை
சுமக்கும் நத்தை போல்
எம்
தேசம் சுமந்து நடப்பவரே

றங்கா கடலின் அலைபோலே
உழைத்து
உயரும் மழலைகளே
விரிந்த
வானக் குடைபோலே
மண்ணைக்
காக்கப் போகும் மறவர்களே

மாறும் மாறும் உலகமெலாம்
மாற்றிப்
போடப் படித்திடுவோம்
மாறுதல்
காணும் ஒருதினத்தில்  
நல்லோர்
வாழக் கற்றிடுவோம்!



vidhyasagar1976@gmail.com