ஆசை!
முனைவென்றி
நா
சுரேஷ்குமார்,
அன்பே...
நான்
அமைச்சராகலாமென்று
ஆசைப்பட்டேன்!
இடைத்தேர்தலில்
போட்டியிட்டேன்!
உன்
இடைபார்த்துத்
தோற்றேன்!
சட்டமன்றத்
தேர்தலில்
போட்டியிட்டேன்!
உன்
ஜடைபார்த்துத்
தோற்றேன்!!
நாடாளுமன்றத்
தேர்தலில்
போட்டியிட்டேன்!
உன்
நடைபார்த்துத்
தோற்றேன்!!
உன்
கணவனாகலாமென்று
ஆசைப்பட்டேன்!
உன்னை
காதலித்துக்
கொண்டிருக்கிறேன்!!
munaivendri.naa.sureshkumar@gmail.com
|