மழைப்பாடல்

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை       


தாங்கவொண்ணாக் காதலின் வலி தவிர்க்க
சூழ்ந்திருந்த
எல்லாவழிகளையும்
இறுக
மூடித் திறப்புக்களைத் தூர வீசி
என்னை
சிறையிலிட்டுக் கொண்டேன்
வெளியேற
முடியா வளி
அறை
முழுதும் நிரம்பி
சோக
கீதம் இசைப்பதாய்க் கேட்ட பொழுதில்
மூடியிருந்த
யன்னலின் கதவுகளைத்தட்டித் தட்டி
நீரின்
ரேகைகளை வழியவிட்டது மழை

 

mrishansha@gmail.com