வாழ்வியல் குறட்டாழிசை (குறள்+தாழிசை.)

வேதா. இலங்காதிலகம்,ஓகுஸ், டென்மார்க்.
 

1. பெற்றோர் உயர்வு.

உலக உறவின் ஆரம்பச் சுருதி
உன்னதமான அம்மா, அப்பா.

அன்புப் பெற்றோர் அனுபவ மொழி
வென்றிடும் வாழ்விற்கு ஏணி.

மதியற்று  மனிதன் அந்நியமாய் பெற்றோரை
மதித்தால் அவன் அற்பன்.

பெற்றோர் மனமிசை வீற்றிருக்கும் பிள்ளை
குற்றப் பாதையை நாடான்.

வாழ்வுக் கோயிலின் மூல விக்கிரகங்கள்
தாழ்விலா வாழ்வுடைய பெற்றோர்.

கற்று உயர் பதவி வகித்தென்ன
பெற்றோரைப் பேணாதோன் கீழோன்.

உயர்வு தாழ்வற்ற பெற்றோர் அன்பு
துயர்வற்ற படகுத் துடுப்பாகும்.

கனிவுடை பெற்றோர் பிள்ளைகளிற்கு நல்ல
துணிவு தரும் தோழராகிறார்.

இறைவனுக்குச் சமமான பெற்றோர் இல்லத்து
கறையற்ற தூண்டாமணி விளக்குகள்.

நன்றாக வாழ்ந்து தமது பெற்றோர்
நற்பெயர் காத்தல் பிள்ளைகட்கழகு.


kovaikkavi@gmail.com