தாய்மை!
முனைவென்றி
நா
சுரேஷ்குமார்,
நீண்டதொரு
சாலையில்
மிதிவண்டியை
இழுத்தபடியே
என்னோடு
பேசிக்கொண்டே
நடந்தாய்
நீ!
நாமிருவரும்
தற்காலிகமாய்
பிரியவேண்டும்
என்பதை
குறிப்பால்
உணர்த்தியது
சாலையின்
பிரிவு!
என்னிடம்
விடைபெற்றபடியே
சாலையின்
வலதுபுறமாய்
அழுத்தினாய்
நீ
உன்
மிதிவண்டியை!
என்
கண்ணைவிட்டு
நீ
மறையும்வரை
உன்னை
பதைபதைக்கும்
உள்ளத்தோடு
பார்த்துக்
கொண்டிருந்தேன்!!
நடைவண்டியை
தள்ளிக்கொண்டு
உற்சாகமாய்க்
கிளம்பும்
தன்
குழந்தை
கீழே
விழுந்துவிடக்கூடாது
எனத்
தவிக்கும்
தாய்
போலவே...
munaivendri.naa.sureshkumar@gmail.com
|