ஏன் அழுகிறாய்?

சரவணா

ஒரு உன்னத இனத்தில் பிறந்தோம்
இனத்தின் துயர் துடைக்க
தலைவனின் பின் அணிவகுத்தோம்
மனமுவந்து மரணத்தில் மாலைகளை அணிந்தோம்,

எங்களின் வழிகளில் பயணித்து விட்டோம்,
உடல் தானே மரித்தது ஏன் அழுகிறாய்
எங்களின் ஆன்மா உன்னோடு,
உன் சுவாசத்தோடு அதை உணரவில்லையா,

அன்று கடமை உன்னை சந்திக்க
காலம் வாய்பளிக்க வில்லை,
இன்று காலனின் தயவில்
உன்னுடன் உனது சுவாசத்தில்,

உனது கண்ணீர் துளிகளில் கரைந்து செல்லும்
உணர்வுகள், எங்களின் ரத்த அணுக்களிலும்
உனது எண்ணங்களை சுமந்தோம்
இதோ நமது தாயின் மடியிலேயே அந்த துளி சிந்தினோம்

ஏன் அழுகிறாய் நாங்கள் முழந்தாலிட்டு
கரங்கள் உயர்த்தினோமா நீ அழுவதற்கு
என் அன்னைக்காக உனக்காக
நெஞ்சம் நிமிர்த்தி இன மானத்தை உயர்த்தினோம்

ஏன் அழுகிறாய் இதிகாசத்தை நாங்கள்
மீண்டும் உயிர்படுத்தினோமடா
எனது அக்கா அண்ணாக்களின் வீர வரலாற்றை
கேள் என உனது சந்ததிக்கு பறைகொட்டி
சொல் ஏன் அழுகிறாய்

இரவும் பகலும் வந்து போகும்
வரட்சியும் வசந்தமும் வந்து போகும்
கொடும் புயலும்,குளிர் தென்றலும் வந்து போகும்
அதே போல் தான் நாங்களும் வந்தோம் சென்றோம்

ஏன் அழுகிறாய் உலகம் தனது ஓட்டத்தை
முடித்து விட்டதா? எங்கள் உடல் தானே மரித்தது
மாவீரனுக்கு ஏதடா மரணம்
நாங்கள் உடல் அழுகி உறுப்பழுகி சாகவில்லை

தாயின் மடியிலேயே அவள் தந்த குறுதி
அவளுக்கற்பணித்தோம், இது எங்கள் வழி
நாங்கள் எங்கும் செல்லவில்லை
ஏன் அழுகிறாய், என்றும் உண்ணோடு உன் சுவாசத்தில்

எனக்கும் உனக்கும் மரண‌ப் பூவேலி மட்டும் தானே
எங்களின் கடமை முடிந்தது பாதை திறந்தது
உனக்கு கடமை இருக்கிறது,
உனது பாதையில் நீ                  

முன் சென்று பின் சொல்வதல்ல நம் தமிழர் மரபு
நாங்கள் இதிகாசத்தை மெய்ப்பித்தோம்
நீ தாத்தாவின் வாக்கை காப்பாற்று
உலகோர் ஆயிரம் கதை சொல்லட்டும்

இங்கே யாரும் எதிரிகள் இல்லை
அவர்கள் கடமை அவர்கள் செய்தார்கள்
எங்கள் கடமை நாங்கள்
மரிப்பதும் பிறப்பதும் உலக நியதி

சிந்தித்துப் பார் மரித்தார் மரித்தரே
எப்படி மரித்தால் என்ன அந்த கதைகளில்
மனம் தளராதே உனது கடமையை
தொடர்ந்து செய்,  நாங்கள் மனம் தளர்ந்திருந்தால் ??????

உனக்கு பின்னே சிலுவையில் அறையப்பட்டு இருக்கும்
ஏசுவைப்பார் அவரும் ஒரு கொள்கைக்காக
மரித்தார் அது அவர் வழி
நாங்களும் எங்களின் கொள்கைக்காக உடல் இழந்தோம்
இது எங்கள் வழி ஏன் அழுகிறாய்,

உன் அழுகை எங்களின் ஆன்மாவை களங்கபடுத்தும்
புன்னகை சிந்திடு எனது அக்கா அண்ணாக்களின்
வீர வரலாற்றை பாருங்கள் என்று உலகிற்கு உணர்த்திடு
நாங்கள் உடலால் மரித்தோம் உணர்வால் உன்னோடு

அன்புடன் உனது அக்கா அண்ணாக்கள்
விண்ணகத்தில் இருந்து.



rajesaravana@gmail.com