மரப்பாச்சி
கவிஞர்
இரா.இரவி
தரணிக்கு உணர்த்தியது
தச்சனின் திறமையை
மரப்பாச்சி !
பெரியவர்களுக்கும் பயன்பட்டது
விற்றுப் பிழைக்க
மரப்பாச்சி !
வெட்டியதற்கு வருந்தாமல்
மகிழ்ந்தது மரம்
மரப்பாச்சி !
பெண் இனத்தின்
பிரதிநிதியாக
மரப்பாச்சி !
உடையவே இல்லை
பலமுறை விழுந்தும்
மரப்பாச்சி !
உண்ணாவிட்டாலும் சோறு
ஊட்டி மகிழ்ந்தது குழந்தை
மரப்பாச்சி !
பொம்மை அல்ல
உயிர்த்தோழி குழந்தைக்கு
மரப்பாச்சி !
அம்மணம் பிடிக்காமல்
ஆடை அணிவித்தது குழந்தை
மரப்பாச்சி !
பேசாவிட்டாலும் பேசி
மகிழ்ந்தது குழந்தை
மரப்பாச்சி !
கோபம் வந்தால்
ஆயுதமானது குழந்தைக்கு
மரப்பாச்சி !
தாயுக்கு உதவியது
குழந்தைக்கு சோறு ஊட்ட
மரப்பாச்சி !
உரசிப் போட
நீக்கியது தலைவலி
மரப்பாச்சி !
உற்று நோக்கினால்
உயிருள்ளதாகத் தெரியும்
மரப்பாச்சி !
அக்றிணை அல்ல
உயர்திணை
மரப்பாச்சி !
eraeravik@gmail.com
|