ஊறிப் போன சில ஊறுகாய்கள்

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை 

சுடர் தரும் விளக்கின் அடியின் 
இருள்வட்டமாய்
 
உள்ளத்து
அறையினுள் 
இருள்
..!

பறிக்கப் பட்ட
விழுந்து
கிடக்கின்ற 
மாங்காய்
வடிவமாய் 
இலங்கைப்
படம் ..

கறுப்பு மையடித்த 
பழுத்த
மூடி மூளைகளில் 
வரண்டு
போன 
சிந்தனை
வெடிப்புக்கள் .

செத்துப் போன உணர்வுகளை 
மாவினாறு
குருதிக் கிணற்றில் 
கழுவி
விட .....
விதவை
உடுத்தாடை கட்டும் 
ரணமான
உடம்பு .

யாழ் 
பொது
நூலகக்  கூரையில் 
ஒரு
ஜீவ குயில் -
என்
சோக கதையை 
ராகமிசைக்கும்
.

துப்பாக்கிக் குண்டுகளை 
மாலையாக்கிக்
கொண்ட 
அந்த
அப்பாவி உறவு 
என்னை
-
விட்டுப்
பிரிய 
பெரு
மூச்சு விடும் .

மனதிற்கு 
தாங்காத
துயரம் தரும் நிகழ்வு 
என்னுள்ளது
 
நாடி
நரம்புகளை 
மெதுவாய்
....
உடைத்து
நொறுக்கும் .

சீக்கிரிய ஓவியமாய் 
ஆத்மாக்களின்
நிழல்கள் -
நினைவுகள்
 
ரம்யம்
சேர்க்கும் 

அழுகை ஓலங்களும் 
கதறல்
சப்தங்களும் 
சலங்க்களும்
 
உணர்வுகளைப்
பிணமாக்கி 
பாசவுள்ளங்களை
-
கனவில்
காட்டும் 
நினைவில்
திணிக்கும் .

சாதி மத பேதங்களால் 
ஊறிப்
போன சில  ஊறுகாய்களால் 
மனித
நாவுகள் 
உப்பில்லா
பண்டத்தை நோக்கும் ..

இரவுகள் கூட
அமைதியாய்
உறங்கி விடிய 
சமூக
 விரோதங்கள் -
உச்சி
வெய்யிலில் தோன்றும்  
சூரியனாய்
 சுட்டு எரிக்கும்.

ஆனாலும் ....
உலகமே
பேயாட்டம் ஆட ,
என்
மனமோ -
தியானம்
பண்ணும்
(அல்லாஹ்வை நாடும் )

நீரில்
வாழும் -ஒரு 
மீனைப்
போல
தரையில்
வாழும் -ஒரு 
செடியைப்
போல ...

துயரக் காற்று  
என்
ஞாபாகங்களை 
தடவிச்
செல்ல  
வேதனை
ஊற்றுக்களில் 
என்
கண்ணீரை கழுவி விட ....
அகதி
முகாங்களின் அவலங்களை 
நிவாரணப்
பிச்சை -
மாற்றி

விடும்
...!                                                                                                                                                                                                                         

sk.risvi@gmail.com