நாளை வரும்
அ.இராஜகோபாலன்
எழுதாமல்
பக்க நினைவுக்காக
மூடிய பதிவேட்டில்
முடங்கும் பேனா.
கணக்கிடாமல்
காற்று தூக்காதிருக்கக்
காகிதக் கணமாய் அமர்ந்திருக்கும்
கால்குலேட்டர்.
காலி நாற்காலிக்குக்
காற்று வீசும் மின் விசிறி.
அவசரம் பற்றி அறியாத காகிதங்கள்
அட்டைக் கட்டுக்குள்
அடக்கமாய் உறங்கும்.
தாமதமாவதில்
கவலை தோய்ந்து,
தினமும்
வந்துவிடுமென்று
வாசல் பார்த்து ஏமாறும் முகங்கள்
நினைவில் வந்து நெஞ்சு கணக்கும்.
நடைத்தவம் புரிந்த எனக்கு
'நாளை
வரும்'
என்று வரம் கிடைக்கும்.
நாளை நிச்சயம் வரும்.
appan.rajagopalan@gmail.com
|