விவசாயி

நாச்சியாதீவு பர்வீன் 

முளைக்கத் தொடங்கிவிட்டது
நெல்விதை

விதைக்குள் ஒளிந்திருக்கும்
அரிசி
மணியில்
யார்
பெயர் எழுதப்பட்டுள்ளதோ

அதிகாலை சேவலின்
கூவல்
ஒலியில்
கண்விழித்து
வயலுக்கு
செல்வான்
விவசாயி

கசட்டை சாயமும்
கருப்பட்டித்துண்டுமே

அவனது
காலை ஆகாரம்

விதைத்த வயல்ப்பரப்பை
அவன்
விழிகள் மேயும்

நிலத்தின் நிலவரம்
அறிந்தவன்
அவன்

அவனின் வியர்வைத்துளி
நிலத்தை
பண்படுத்தும்

மண்புழுவைப் போல
நிலமெங்கும்
உலவி
பயிரின்
வளர்ச்சியை
பரிசோதிப்பான்

கிளிகளிடமிருந்தும்
மைனாக்களிடமிருந்தும்

இன்னும்
நெற் குருவிகளிடமிருந்தும்
விதைகளை
காப்பாற்றும்
வித்தை
தெரிந்தவன்

சேற்றை உண்ண வரும்
காட்டுப்
பன்டிகளை
கட்டுப்படுத்தும்
"கலை" தெரிந்தவன்

நெல்லுக்குள் ஊடுருவி
வளரும்
புல்லுரிவிகளை
இனங்கண்டு
இல்லாதொழிக்கும்
சாணக்கியன்

ஒரு கவிஞன் சொன்னான்
விவசாயி
.............
சேற்றில்
கால்வைக்க வேண்டும்
நாம்
சோற்றில் கை வைக்க
உண்மை
...உண்மை

விதை நட்டு
அது
கதிராகி
சூடடித்து
-நெல்
வீடு
வந்து சேறு மட்டுக்கும்
விவசாயி
உழைக்கிறான்

 

armfarveen@gmail.com