அந்தப்
புளியமரம்
நாச்சியாதீவு
பர்வீன்
அந்தப்புளியமரம்
இன்னுமிருக்கிறது
வெறிச்சோடிய
நிழலோடு
கம்பீரம்
இழக்காமல்
கிளைகள்
பரப்பி
அந்தப்புளியமரம்
இன்னுமிருக்கிறது
ஊஞ்சல்
கட்டி
ஆடிக்களித்த
கிளைக்கொப்பை
இழந்து
போய்
விட்டிருந்தது
அந்தப்புளியமரம்
குட்டான்
சோறாக்கி
கும்மிடு
பூச்சி
விளையாடி
சிட்டுக்குருவிபோல
ஆடிக்களித்த
விரிந்த
நிழல்
பரப்பு
இன்றுகளில்
கலை
இழந்து
காணப்படுகிறது
முச்சந்தியில்
அந்தப்புளியமரம்
இருந்ததனால்
இளசுகளின்
மாநாடுகள்
அந்திகளிலும்
பெருசுகளின்
கூட்டணி
அவ்வப்போதும்
மரத்தைச்
சுற்றி
மணக்கும்
அமர்ந்து
கதை
பேச
யாரோ
அமைத்து
வைத்த
தென்னங்
குற்றி
கால்கள்
கொண்ட
பலகை
இருக்கை
இன்றில்லை
துருப்பிடித்த
ஆணிகள்
மட்டுமே
இருக்கை
இருந்ததனை
உறுதிப்படுத்துகின்றன
கூடாரமடித்து
வெள்ளைக்
கொக்குகளின்
குடும்ப
வாழ்க்கை
அரங்கேறும்
கொக்குகளின்
உலகம்
அந்தப்புளியமரம்
ஊர்
சங்கதிகள்
சந்திக்கு
வருவது
முதலாவது
இந்த
சந்திதிப்
புளிய
மரத்தடியில்
தான்
ஊர்
உறங்கிப்போன
பின்னும்
ஊர்க்கதை
பேசிக்கொண்டே
இந்த
மரத்தடியில்
காலம்
கடத்தும்
எந்தக்கூட்டமும்
இப்போது
இங்கில்லை
பக்கத்து
வளவில்
விளையாடும்
சடுகுடு
ஆட்டம்
சிலநாட்களில்
கிட்டிப்புல்லு
இன்னும்
சிலநாட்களில்
கிளித்தட்டு
இப்படி
நாளொரு
விளையாட்டையும்
ரசிக்க
புளிய
மரத்தடியில்
கூட்டம்
கூடும்
இப்படியான
புளியமரத்தடியின்
கலகலப்பு
இப்போதுகளில்
கலைந்து
கலை
இழந்து
போய்க்கிடக்கிறது
அந்தப்புளியமரம்
அவ்வவ்போது
கொக்குகள்
மட்டுமே
வழமைபோல
கூடு
கட்டி
குடும்பம்
நடத்தி
குஞ்சி
பொறித்து
காலம்
கடத்துகிறது
எந்த
மனிதனும்
அந்தப்
புளியமரத்தை
அண்டுவதில்லை
அதில்
பேய்
வாழுவதாய்
பேசிக்கொள்கிறார்கள்
உங்கள்
ஊரிலும்
ஒருமரம்
மாவாய்
புளியாய்
பலாவாய்
ஆலமாரமாய்
கடந்த
காலத்தை
சுமந்து
கொண்டு
இருக்கலாம்
பாவம்
அந்தமரம்
கொஞ்சம்
பாசம்
காட்டுங்கள்
armfarveen@gmail.com
|