வேரும் விழுதுகளும்..

தீவகம் வே. இராசலிங்கம்

(தனிநாயகம் அடிகளார் நினைவுக் கவியரங்கம்-2013)

கன்னலாய் இனித்தாள்! அந்தக்
         கனிமொழி ஈர்த்து
என்னை
மின்னலாய்
அடித்தாள்! விஞ்சும்
         விதத்திலே கவிதை தந்தாள்!

கன்னிதான்
அவளென் றாலும்
          காதல்கொண் டுவந்த
தாலே
அன்னையாய்
ஆனாள்! என்றன்
               அருந்தமிழ் வணக்கம் செய்தேன்!

பூவகம் பூங்கா ஆக்கும்!
            பொன்வயல் பொங்கல்
காட்டும்
நாவகம்
உரையைச் சொல்லும்
            நல்லவர் மனதைத் தட்டும்!

பாவகம்
கவிதை யார்க்கும்!
            பாரதி பெயரைச் சொல்லும்!

தீவகம்
இதற்குள் எல்லாம்
            திளைத்ததே! சரிதம் சொல்லும்!

வேரதும் விழுதும் என்ற
            விதத்திலே கவிதை
மன்றம்
ஊரதும்
ஊரின் மேன்மை
            உத்தமன் பெயரால்
வந்த
நீரதில்
விளைந்த வாழ்வின்
            நிசத்திலே உலகம்
போற்றும்
பேரதைச்
சொல்லு கின்ற
            பெருவிழாத் தலைவர் வாழ்க!

கவினுறுங் கவிதை யாத்துக்
            கனித்தமிழ் மீது
சேர்த்து
அவியெனப்
பெய்யும் யாகம்
            அளிப்பவர் தாமும் வாழ்க!

செவியுறத்
தீஞ்சொல் ஊட்டித்
            தோட்டமாய் உரைகல்
மீட்டிக்
குவியுறும்
வில்லை போலே
            குலவிடும் அறிஞர் வாழ்க!

தனிநாய கத்தார் என்று
            தரணியில் வரலா
லுற்ற
மனிதமே
விருட்சம் ஆன
            மகத்துவ வேரைக்
காட்டும்
புனிதமே
இந்தப் பாவின்
            புத்தகம் என்ப
தாலே
கனிதரும்
சிறப்பி னூர்ந்து
            கவிஞனாய் வந்தேன் ஏற்பீர்!

மறையொடும் விஞ்சும் வாழ்வை
            மக்களுக் குணவாய்
ஊட்டி
இறைதரும்
தூய வாழ்வை
            இயம்பிட வந்த
போதும்
நிறைதரும்
தமிழின் வாழ்வும்
            நிறைந்ததே புனிதம்
என்ற
துறையொடும்
உலகம் செய்த
            தூயவர் அடிகள் தாமே!

கசமுசா பூசா பைசா
            கரகரா என்று
இன்று
மசமசாப்
பெயரை வைத்து
            வாரிசு ஆக்கிப்
பின்னால்
புசமிடும்
தமிழன் என்று
            பீற்றுதல் என்ன லாபம்?

நிசமுளத்
தமிழன் என்று
            நிறுத்தியே பெயரை வைப்பீர்!

தில்லியில் நின்றால் என்ன?
            துருவத்தில் வளர்ந்தால் என்ன?

கொல்லையில்
இருந்தால் என்ன?
            கூப்பிட்டால் தமிழே
கேட்கும்
சொல்லையே
பெயராய் வைப்பீர்!
            துருத்தியாய் அழிப்பார்
மன்றில்
வல்லபேர்
தமிழில் வைத்து
            வரலாற்றை எழுது வீரே!

தோடுகள் புனைந்த செல்வர்
            தேசங்கள் தோறும் வந்தார்!

ஆடுகள்
செவிகள் போன்று
            அவரிப்போ தூக்க
ணத்தில்
கோடுபோல்
தலையிற் கீறு
            குலமகட் கிறங்கும் சட்டை!

கேடுபோல்
ஆகு மன்றோ?
            கொள்ளுவீர் தமிழ்பண் பாடு!

தனிநாய கத்தார் என்று
            தண்தமிழ்ப் பெயரை வைத்தார்!

இனியதொல்
காப்பி யத்தில்
            இறுமாந்தார்! அமிழ்தம் என்றார்!

குனிவதே
வடசொல் சேர்த்துக்
            குறிப்பது உரைப்ப
தெல்லாம்
தனித்தமிழ்
என்று இல்லை!
            தாங்குக தமிழை என்றார்!

செக்கிலே சுற்று மாப்போல்
            சிலதையாம் கற்றோம்!
அந்தக்
குக்கலில்
இருந்து மீண்டு
            கொள்வதும் மிகவும் நோவாம்!

இக்கணம்
நிலமும் வாழ்வும்
            இயற்பெயர் தமிழும் வைப்போம்!

துக்கமாம்
அழிப்பில் நின்று
            திருந்தியே மீள்வோர் வாரீர்!

என்தமி ழோடு வந்து
            இனியஇச் சபையி
னாங்கு
சொன்னதெல்
லாமும் கல்வி
            செறிந்தவர் வாழ்ந்தோர்
மற்றும்
முன்னுளார்
தந்த மேன்மை
            மூட்டிய நெருப்பிற் பெற்றோம்!

அன்னவள்
தமிழா ளோடும்
            அமர்கின்றேன்! வணக்கம் செய்தேன்!

 

vela.rajalingam@gmail.com