என பிறந்தநாள்..!

தீவகம வே.இராசலிங்கம

கருவறையின் இருட்டுக்குள்
காதுமட்டும் திறந்திருந்த காலம்போய்..
விழியினிலும் ஒளிபிறந்தது
அந்த
நாள்..!

முந்தானை இடுக்கில் வைத்து
உயிர்ப்பால்
தந்தபோதுதான்
அகக்கண்களில்
இருந்த என் அன்னை
நிசக்கண்களுக்கும் தெரிந்தாள்!

ஆயிரத்துத் தொழாயிரத்து நாற்பத்தியேழு
மாசித்திங்கள்
இருபத்தியொன்று என்பது
தாய்க்கரத்தில்
யான்தவழ்ந்த நாள்!

நிலமும் நீரும், நெல்வயல்களுமாய்
உலகியல்
செய்த ஒரு வனப்புப் புலத்தில்
என்
வடிவம் வளர்ந்தது..

தமிழ்தந்தாள் அன்னை!
தன்னைக் கொடுத்தது நிலம்!
இப்பொழுது..
நிர்வாணம் எடுத்த நெடுந்தருக்களின் கீழ்
நிசங்களைத்
தேடியபடியே..

 

vela.rajalingam@gmailc.om