குளிருறை
க(h)ண்டம்..!
தீவகம்
வே.இராசலிங்கம்
மேபிள்
மரங்கள்
இலையுதிர்ந்தால்
விறைக்கும்
பனிக்காலக்
'கேபிள்வயர்'
தொடுக்கப்படும்!
பச்சை
நிலமுரிந்து
பட்டநிலம்
போலாகும்..!
சோலை
மலர்க்கூட்டம்
துக்கம்
விசாரிக்கும்!
பாலை
வனம்போலே
பசுங்காலம்
போயுறங்கும்..!
காலக்
குளிர்தாங்கிக்
கடும்துணிகள்
வந்துவிடும்!
ஒருசாண்
துணியில்
உலவித்
திரிந்தவர்கள்
பெருச்சாளி
போலே
பொந்துக்கு
வருவார்கள்..!
மயங்க
நின்ற
வாவிக்கரை
மக்களினைக்
கலைத்துவிடும்..!
பட்டுப்
பனித்துகளில்
பரந்த
வெளிமூடும்!
சின்னி
விரலும்
சிவப்பு
இரத்தம்
உறைந்துவிடும்
தின்னும்
உறைபனிகள்
தெருவையும்
மூடிவிடும்..!
வீட்டின்
கூரை,
விளைந்த
பயிர்வயல்கள்
கூட்டுப்
பனிச்சிறகால்
குவிந்தெங்கும்
வெள்ளையிடும்..!
நயகரா
நீர்வீழ்ச்சி
நடுங்குங்
கல்லாகும்..!
வெண்பனிப்
பரப்பில்
மேபிள்
மரங்கள்
கிறுக்கனின்
கோடுகளாய்
நிழற்படங்கள்
தயாரிக்கும்..!
வானைப்
பிளந்து
வருகின்ற
பனிப்பட்டு
கோனாகிக்
கொப்பெல்லாம்
குவிந்து
கல்லாகும்..!
பட்டுப்
பனிமலரின்
பாரம்
தாங்காமல்
கொப்புக்கள்
முறிந்து
கொன்றொளிக்கும்
மின்சாரம்!
உணவுக்கு
ஓட
உறைபவரைக்
கலைத்துவிடும்
அரசுக்குச்
செலவாகும்..
ஆளணிகள்
போர்க்கால
அறிவிப்புப்
பறந்துவரும்..!
மின்சாரம்
இல்லாமல்
சம்சாரம்
பதறும்!
குஞ்சான்
குழந்தைகள்
கொடுங்குளிரில்
மூடிவிடும்..!
உறைபனியில்
விழுந்து
எழுங்கால்கள்
முறிந்திடுவோர்
அலறல்
சத்தம்
'அம்புலன்சில்'
ஏறிவரும்!
விரைவு
நெடும்பாதை
விழும்பனியில்
மூடிவிடும்..!
உரசும்
கொள்கலன்கள்
உயிர்
பறிக்கும்
காட்சிவரும்..!
கண்ணிற்
படாத
காற்றும்
சுழன்றடிக்கும்..!
சகவில்
இருத்தல்போய்
சய
நாற்பதுக்
குளிராகித்
தேகத்தை
உறைய
வைக்கும்
தினங்கள்
தொடராகும்..!
என்ன
இருந்தாலும்
பனிக்கால
விளையாட்டு
மன்னவரை
இழுத்து
மகுடங்கள்
இடுங்கண்டீர்!
வெண்பனியில்
நத்தார்
விருந்துஇடும்
என்றாகில்
கண்மலர்ந்து
கொள்ளும்
காதல்நிலம்
கனடாதான்!
வீசு
பனிக்காலம்
வீட்டுக்குள்
உலுங்கிப
பாடற்
கணனியிலே
பாட்டு
வைத்தேன்
vela.rajalingam@gmailc.om
|