மனித இனம்
கலைமகள் ஹிதாயா
ரிஸ்வி -இலங்கை
கருப்பு
முடிகளை நரைத்த முடிகளாக
மாற்றுகின்றது வயசு
நிரந்தறமற்ற உலகை சொந்தம் கொண்டாட
நினைக்கின்றார்கள் மனிதர்கள்
என்னை கடக்கும் நாட்கள்,
மாறிச் செல்லும் காலங்கள் வழக்கம் போல்
சூரியனைக் கண்ட பனி போலாகின்றன.
உடம்பில் வலி
நீரிழிவு
காச்சல்
இருமல்
கால்நோவு
கண் வலி
வயிற்று வலி
இப்படி இப்படி
ஒவ்வொன்றாய் தொடங்கி தொடங்கி
மருந்துகளில்மாறி மாறி
எல்லாம் சிலந்தி வலைகள்போல்கிடக்கின்றன
மரணம் மண்ணில் நிகழும் படியாய்
அங்கொரு ஜீவன் வைத்தியசாலையில்
தூக்கிச் செல்ல அவகாசமில்லாமல்
முச்சுக்கள் சுவாசங்களோடு
சுவாசங்ககள்
முச்சுக்களோடு போராடுகின்றன
உறவுகளின்நெருக்கம்
மனதோடு பிசைகின்றன
உயிரையெடுக்கும் மலக்கே
அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறிவிடாதே
மரணம்
வரும் வரை
உலகில்
பல கோலங்களாய் மனித இனம் !
|