நிகழ்ச்சிக்
காலசர்ப்பம்
தீண்ட......
பாரதிசந்திரன், திரு
நின்றவூர்
எனக்குள்
எதுவாகவோ
மறைந்து
கொண்ட
தூக்கம்
உண்ண
ஆகாரம்
தேடி
அலையும்
தேனீயைப்
போல்
மலர்ந்த
கண்களில்
உலர்ந்தது
தூக்கம்
உள்ளிருந்த
காலம்
சுயம்
மறந்த
உள்ளார்ந்த
லார்வா
வெளிப்படும்
சதுக்கப்பூதமென
உடல்
காட்டி
உடல்
எடுத்த
சுவிகாரம்
மறைப்பின்
சிம்மாசனம்
அது
முதலாளித்துவம்
அதனால்
மறப்பீர்.
கோசங்கள்
வான்
தொட்டது.
முடிவு
திறப்பின்
பாதாளம்
புல்தரையோ,மண்
மேடோ
புகுத்திப்பார்க்கும்
மூளை
மழுக்கியின்
நர்த்தனங்கள்
ஆவலோடு
அமிழ்த்தி
ஆழ்ந்து
உள்குளிர
வந்து
வாய்க்கிறது.
நிகழ்ச்சிக்
காலசர்ப்பம்
தீண்ட
உமிழும்விஷத்தை
விடப்
பிடிப்புத்
தளர்வாகி
மாறி
மாறி
மொய்த்துத்
தின்கிறது.
chandrakavin@gmail.com
|