பாவம் பொடிபட மனிதம்
புரிபடும்..
வித்யாசாகர்
ஓடும்
எறும்பு
நசுங்கிப்போகும்
தின்ற
மீனின்
உடம்புநோகும்
வெட்டும்
சதையில்
பாவம்
வடியும்
அது
வாழ்வெங்கும்
கூட
வரும்;
பார்க்கச்
சிரிக்கும்
பெண்ணும்
பாரம்
சிரிக்க
ஏங்கும்
ஆணும்
பாரம்
உறவு
புரியா
மனதிற்குள்ளே
ஆயிரம்
பூதம்
கனமே
சேரும்;
திட்ட
கூட
மனசு
சாகும்
வார்த்தை
அடியில்
இதயம்
கிழியும்
மனித
எண்ண
ஓட்டையில்
– வாழ்க்கை
மரணமாக
அடைந்துப்போகும்;
முடிச்சவிழ்க்கா
சிக்கல்
நேரும்
அவிழ்க்கும்
தருணம்
அறுந்தும்போகும்
உடைந்தப்பின்னே
ஒட்டவைக்க
– சில
தருணமோ
இதயமோ
வாய்ப்பின்றியே
பிரிந்துநோகும்;
கொட்டித்
தீர்க்கா
எண்ணம்
கொடிது
வெட்டும்
வாளாய்
வளரும்
பெரிது
சுட்டும்
விரல்கள்
அசையும்
பொழுதுள்
அது
அறுக்கும்
இலக்கு
பிறப்பின்
நெடிது;
கட்டில்கால்களாய்
விதி
மெலிந்திருக்கும்
உண்மையும்
மனிதமும்
தாங்கிபொருக்கும்
பொய்யினால்
சுடும்
சொல்லில்
கட்டிலும்
காலமும்
உடைந்தே
நொறுங்கும்;
வெடிக்க
வெடிக்க
தகறும்
மலைதான்
சறுக்கச்
சறுக்க
நாம்
இடறும்
நிலைதான்
சிரித்து
மகிழ்ந்து
சிரிப்பைப்
பகிர்வின்
நிலைக்கும்மகிழ்வில்
நீளும்
வாழ்க்கை,
மனிதம்
புரிந்தால்
நாலும்
வாழ்க்கை!!
|