முதல்
காதல்
விஜய்
சேசுலா
மேகம் கலைந்து சென்று
வருடம் பல ஆகியும்
அதன் ஈரம்
இன்னும் காயவில்லை
உயிரினுள். . .
கிளி பறந்து
சென்றபின்னும்
கிளைகள்
அதன்
வரவை எதிர்ப்பார்த்து
தினமும் பூக்கின்றன
அவள்
கொலுசு போடுவதை
நிறுத்திவிட்டாள்
ஆனாலும்...
அவளின்
இளமை கால கொலுசின் ஓசை
அவனுக்குள்
இன்றும் எதிரொலிக்கும்
பேரன் பேத்தியை
கண்ட பின்னும்
இதயத்தின்
மெல்லிய பகுதியில்
அவளின் கால்தடம்
ஆழமாக பதிந்திருக்கும்
காதல் நிலவை
கண்டு வருடம் பல
ஆனாலும்
கடைசி சுவாசக்காற்றுக்காக
காத்திருக்கும் தருணத்தில்
அந்த வெண்ணிலவை காண
மனம் துடியாய் துடிக்கும்
உறவென்னும்
விழுதுகளும்
கிளைகளும்
ஆயிரம் இருந்தாலும்
காதல் ஆலமரத்தின்
ஆணி வேராக
இருப்பது
முதல் காதல்தான் .
இதய புத்தகத்தின்
முதல் பக்கத்தில்
கிறுக்கிவைத்த
அவளின் பெயரை
ஒரு தடவையாவது
வாசித்து பார்க்காமல்
கண்கள் தூங்குவதில்லை
உயிரின் செடியில்
முதலாவதாக பூத்த
அந்த ஒற்றை
ரோஜாவின் வாசம்
வாழும் காலம் வரை
உயிரினுள் வீசும்
vijaysesula@gmail.com
|