கோரப் பல்
பாண்டூ,
காதெலெனும் போர்வையில்
காமப் பசியாறத் துடிக்கும்
உன் கோரப் பல்லை
நான் அறிவேன்!
அழகிய அசுரனே!
இனியும் ஜீரணிக்க முடியாது...
அன்றாடச் செய்தித்தாளில்
அடிபடும் உன் அட்டூழியங்களை!
உன் கோரப் பல்லின்
அகோரத் தாண்டவத்தை!
நீ மெல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல் தவிக்க...
இதோ என் போர் பிரகடணங்கள்!
நரகக்குழியில் விழுவேன்...
ஆயினும் நரனே!
உன் ஆசைக் குழியில்
இடரேன்!
ஊர் சுற்றும் வாலிபனே!
இனியும்
என்முன் பல்லைக் காட்டாதே;
காட்டுவதற்கு
பல்லிருக்காது!!
பாண்டூ,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
சிவகாசி
9843610020
|