குப்பைக்குள் குப்பையாய்

ஆவூர் கைஸ்ரே ஜஹான்



குப்பையாக்கப்பட்டு
நிரம்பிய தேசத்தில்
குவியலுக்குள் நாம் !

ஆலைகளின் கழிவுகளில்
அசிங்கமாகிப் போன
ஆறுகளுடன் நாமும் !

அரசியல் அதிகாரத்தில்
ஏழை வயிற்றுப் பணம்
கோடிகளாக சுவிஸில் !

கொஞ்சி விளையாடும்
பிஞ்சுகளைக்கூட விட்டு
வைக்காக் காமக்கயவர்கள் !

தேசப் பிதா – கொன்றவனைத்
தியாகியாக்கும் தீவிரவாதம்
உருக்குலைகிறது தேசம் !

குப்பை அள்ளுவதாய்
போஸ் கொடுப்பதாலே
தூய்மையாகிடுமா நாடு?

எதை அகற்றுவது
தெருவில் கிடப்பதையா?
தேசத்தில் அலைவதையா?

வினாக்கள் பெருக
விடை தேடி நாமும்
குப்பைக்குள் குப்பையாய்!