காதலித்துப் பார் ...!
விஜய்
சேசுலா
காதலித்துப் பார் ...!
கண்களுக்கு புதியதோர்
மொழியை கற்றுக் கொடுக்கும்
பார்வைக்கு புதியதோர்
உலகத்தை அறிமுகப்படுத்தும்
அரும்பு மீசையில் ஐயனாரின்
வீரம் பிறக்கும்
காமத்தோடு காதலையும்
காதலோடு காமத்தையும்
போட்டு குழப்புவாய்
காதலித்துப் பார்.....!
எமனை ஜெயித்துவிடும்
சக்தி பிறக்கும்
ஆனால்
துப்பட்டா தீண்டியதும்
தோற்றுப் போவாய்
கண்களுக்கும்
கனவுக்கும்
இடையே
கலவரம் நடந்து
உறக்கத்தை தொலைப்பாய்
உன்னை
உறங்க வைத்துவிடலாம்
என்று எண்ணி
சூரியன்
தூக்க மாத்திரைப் போட்டு
ஏமார்ந்துப் போகும்
தூங்காத இரவில்
சில்சில்லாய்
சிதறிக் கிடப்பாய்
காதலித்துப் பார்...!
விடியலை
எதிர்பார்த்து
அனலின் மேல்
தவமிருப்பாய்
இதயத்திற்கும்
இரத்தத்திற்கும்
இடையே
மூன்றாம் உலகயுத்தம்
நடக்கும்
வெள்ளையனுவுக்கும்
சிவப்பனுவுக்கும்
இடையே
உள்நாட்டு கலவரம்
வெடிக்கும்
உயிரின் கையும்
மரணத்தின் கையும்
கைகோர்தப்படி வந்து -
உன்னோடு சண்டை
போடும்
காதலித்துப் பார்...!
அவள் முகவரியை
தேடி அலைந்து
உன் முகவரியை
மறந்து விடுவாய்
காதல் நிலவை
காணாத நாளை
வாழ்நாளில்
கணக்கில் சேர்க்கமாட்டாய்
மனிதர்களின்
கணக்கில் இருந்து
கழிக்கப்பட்டு
தேவ மகனின்
பக்கத்துக்கு நாற்காலியில்
அமர்தப்படுவாய்
வானவில்லின் வண்ணம்
எடுத்து
காற்றுக்கு வண்ணம்
அடிப்பாய்
காதலித்துப் பார்...!
மேகங்களின்
இடுக்கில் ஒளிந்திருந்து
உலா வரும்
வெண்ணிலவை
ரகசியமாக ரசித்து
பனித்துளியாக
உருகி விடுவாய்
தேவதையின்
பிறந்த நாளன்று
நீ
பிறந்ததாக உணர்வாய்
அவளின்
இறந்தநாளை
காண தைரியமின்றி
அவளுக்கு முன்
இறக்க துடிப்பாய்
உள்ளுக்குள்
இராவணனை
வளர்த்து வைத்திருப்பாய்
ஆனால்
காதல் நிலவின்
அருகில்
இராமனை போல் வேசமிடுவாய்
காதலித்துப் பார்...!
பெருமூச்சின்
சூடு தாங்க முடியாமல்
நுரையீரல் கருகி போகும்
ஒரே நாளில்
முழு நிலவாகவும்
மூன்றாம் பிறையாகவும்
வலம் வருவாய்
உன் அழகான
உருவத்தை
பார்த்துப்பார்த்து
கண்ணாடி
வயதுக்கு வரும்
மணிக்கொரு ஆடை
உடுத்தி
மணிமண்டப வாசலை
அலங்கரிப்பாய்
காதலித்துப் பார்...!
லட்சம் பல விண்மீன்கள்
உன் குட்டி இதயத்திற்குள்
உதிக்கும்
லட்சம் பல
கவிதைகள்
உன் குட்டி பேனாவுக்குள்
பிறக்கும்
உள்ளூரில்
உன்னைப் பற்றி
பேச்சிருக்காது
ஆனால்
உலகமே உன்னை பற்றி
பேசுவதாக பெருமிதம்
கொள்வாய்
பூக்களின் கருவுக்குள்
வாழும்படி சுருங்கி போவாய்
நீலவானத்தை தொடும் அளவிற்கு
ஓங்கி வளர்ந்தும் விடுவாய்
காதலித்துப் பார்...!
பூமியை இருள்
சூழ்ந்ததும் - உனக்குள்
புது வெளிச்சம் பிறக்கும்
உலக கண்கள்
உறங்கியதும்
உனக்குள்
ஒரு ஞானக்கண் திறக்கும்
காதலி பேசிய வார்த்தைகள்
இதயத்தின் நான்கு
மூலைகளிலும்
எதிரொலிக்கும்
ஒருமுறை தேவதையை
பார்த்தும் -
உயிரின்
ஒவ்வொரு அணுக்களிலும்
வானவேடிக்கை நடக்கும்
காதலியோடு சேர்ந்து
நடந்துவரும் பாதை
வானமளவுக்கு
நீளாதா - என
மனம் ஏங்கும்
காதலித்துப் பார்...!
அவள் ஒருத்தியின்
கால்தடம் பதிந்த
பூமியாக மாறி விடுவாய்
காதலியின்
பூமுகம் மட்டுமே
பூக்கும் நந்தவனமாக
மாறிவிடுவாய்
இதயத்தில் இமயத்தை
சுமந்து கொண்டு -
இதழில் புன்னகையை
சுமப்பாய்
மூளை -
இதுவரை சேமித்து
வைத்திருந்த -
நினைவு பதிப்புகளை
அழித்துவிட்டு
கதலியின் ஒவ்வொரு
அசைவையும்
பதிவு செய்யும்
காதலித்து பார் . . . .!
vijaysesula@gmail.com
|