பூட்டும் சாவியும்

முனைவர் இரா.செல்வி



காத்மா காந்தி!
உனது தத்துவம் வலிமையான பூட்டுதான் சந்தேகம் இல்லை.
ஆனால் அந்தப் பூட்டின் சாவியைத் தொலைத்து விட்டு
இனி எதற்கு அந்தப் பூட்டு என்று சொல்வோர் ஒருபக்கம்
கள்ளச் சாவி; கொண்டு அப்பூட்டைத் திறக்க முயல்வோர் இன்னொருபக்கம்.
அந்தப் பூட்டை அடித்து நொறுக்கு என்று
சம்மட்டி கொண்டு அடித்துத் தோல்வி கண்டவர் பிரிதொரு பக்கம்
என்றாலும் உனது தத்துவம் வலிமையான பூட்டுதான் சந்தேகமே இல்லை.
ஆனால் உன் தத்துவம் மூடிய பூட்டாய் இருந்தால்
எப்படிச் சமதர்ம வீட்டைத் திறக்கமுடியும்?
சமத்துவம் சமைக்கமுடியும்?
நான் கள்ளச் சாவி கொண்டுவரவில்லை
சம்மட்டியும் ஏந்திவரவிலை
உன்; பூட்டுத் திருட்டுச் சாவிக்குத் திறந்து கொள்ளாது
சுத்தி அடிக்கு நொறுங்கவும் மாட்டாது என்பதுதெரியும்.
நான் உன் பூட்டைத் திறக்க ஒரு சாவியுடன் வந்துள்ளேன்.
அந்தச் சாவி கொண்டு வெளிப்படையாய் உன் பூட்டைத்திறக்க
யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதுமில்லை.
ஆனால் நான் கொண்டு வந்த அந்தச் சாவியை
நீ நம்புவாய்... உருவாக்கியவரையும் நீஅறிவாய்...
ஏற்றும்கொள்வாய் ...திறந்துகொள்ளவும் செய்வாய்...
இந்தச் சமூகத்திற்கும் சொல்லிவிடுகிறேன்.
நான் அந்தச்சாவியின் பெயர் சொல்ல அஞ்சவில்லை
உலகம் அறிந்த அந்தச் சாவியின் பெயர்மார்க்சியம்.
அந்தச் சாவி கொண்டு திறக்கவிரும்பும் பூட்டு காந்தியம்
அந்தப் பூட்டு சாவியும் பொருந்தட்டும்...
கதவு திறக்கட்டும.;.. சமதருமம் பரிபூரணமாய் மலரட்டம்...
இந்தக் கனவு நிறைவேறும் நம்பிக்கையில் என் பெண்ணியம்...