இடியும் மின்னலுமாய்

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை


தொலைந்து புதைந்து போனது வயசு
பல நாட்களின் நகர்வில்
கறுப்பு முடியை வெள்ளை முடியாய் பார்த்தேன்!

பிறந்த நாள்
இறந்து போன நிகழ்வுகளாய்

தாய்பாலின் இனிமை
வியர்வைத் துளிகளின் கசிவுகளாய்!

மனதுக்குள்ளே கானல் நீராய்
காலம் மாறிச்சென்ற பின்பும்
அசைப் போட்டது மனது!

மீண்டும்
வந்து விட்டது
இடியும் மின்னலுமாய் நிகழ்காலம்!

மழைத் துளிகளாய்- மாற
உள்ளத்து உணர்வுகளை
தயார் படுத்திக் கொண்டு நானும்!



sk.risvi@gmail.com