என்ன மாயம் இது
ராதா மரியரத்தினம்
என்ன
மாயம் இது
வர்ண பேதமும் இங்குண்டா
பச்சையைக் கறுப்பாக்குகிறாய்
நீலத்தைப் பொன்வண்ணமாக்குகிறாய்
பிரபஞ்சத்தையே உன் செந்நிறக் கதிர்களால்
சொர்க்கமாய் மாற்றுகிறாய்
புகைப்பட ஓவியன் போல்
ஒளி கூட்டுகிறாய்
உலக நாடக அரங்கத்திலே
அரிதாரம் பூசுகின்ற
ஒப்பற்ற கலை தான் உனக்கோ
நீலக் கடலலையில்
வெள்ளி உருக்கி வார்க்கிறாய்
குடைபரப்பிய தென்னையிலையை
வீசும் சாமரமாக்கிறாய்
நீல நெடுவானில்
நீ கலந்த கலவையின் எச்சங்களை
கைதுடைத்து விடுகிறாய்
சிவப்பு, பொன்மஞ்சள், மகரம, கரு ஊதாவென வியக்கவைக்கிறாய்
ஆதவனின் கரம் பட்டு அரங்கமாய் இவ்வுலகு
மகரம் - ரோசாக்கலர்
mara94@hotmail.co.uk
|