காதல் மழை

கவிமுத்து


இந்த மழையென்ன
இமயமலையே வந்தாலும் நம்
இருவரையும் பிரிக்க முடியாது!

...

இரவில் மழையில்
இதுவரை நனையவில்லை!
இன்று மட்டும்
இவளோடு நனைந்திட!
இது போல் தினம் வேண்டுமென
இதயம் துடிக்குது இருமடங்காக!!

இன்று வந்த மழை நாளை வருமா?
இல்லை இது போல் சந்தர்பம் திரும்ப வருமா?
இருவருக்கும் இறைவன் தந்த புதிய வரமா?
இதில் எதை ஏற்பது எதை மறுப்பது!
இருவருக்கும் பொதுவாய்
இதயம் இருப்பது! இடது புறமா?

இருந்தும் இல்லை என்று வான் சொல்லுமா? உன்
இதயத்தில் இருப்பது நான் என்று நீ சொல்லம்மா?
இருகரம் ஏந்தி கேட்கிறேன்! என்
இதயத்தில் உன்னை பார்க்கிறேன்!!

இது என்ன புது சுகமா?
இருவரும் செல்வோம் நகர்வலமா!
இனியும் நனைந்தால் உடல் நலம் பெறுமா?
இரவென்பதை மறந்தோம் வெகு நேரமா!

இனிக்கும் ஆசையில்
இருவரும் நனைந்தோம்?
இருக்குது நாளை
இருவருக்கும் கசப்பான மருந்தாய்!!
இருமல்.

இன்னும் என்ன ஆசை எல்லாம்
இவள் நெஞ்சில் வைத்தாளோ!
இரவில் நனைந்தோம் ஒருவராய்
இனைந்தோம்!!

இன்று மழை வரும் என வானிலை சொல்லவில்லை!
இன்று அவள் வருவாள் என்றே என் மனநிலை சொல்லியது!

இரு நூறு ஆண்டுகள் வாழ்வு வேண்டாம்!
இந்த இரவு அவளோடு இது போதும்!!
இரவலாய் வேண்டும்
இரவெல்லாம் வேண்டும்
இதழின் முத்தம்!
இரு கண்ணங் களில் எனக்கு மட்டும்!!
 


muthup.ci@gmail.com