வானமிழந்த பறவைக்கு

கா.ந.கல்யாணசுந்தரம்

முகவரி எனும்
மாய வலைக்குள்
சுயமிழந்து
தொலைந்தபோது
தென்றலுடன்
கைகுலுக்க
எண்ணினேன் !

குரல் கொடுக்கும்
நேரங்களில்
கேட்போர்
யாருமில்லாததால்
மழலைமொழியறிந்து
நாளெல்லாம்
இன்புற்றேன் !

நடக்கும் பாதை
ஒற்றையடிப் பாதைதான்
விட்டுக் கொடுத்த
வாழ்நாட்கள்
வழிகாட்ட மறுத்ததால்
ஓடும் நதியிடம்
நடைபழகி
பயணித்தேன் !

இலக்குகள் தெளிவாய்
இப்போதுதான்
தெரிகின்றன
இருப்பினும்
வானமிழந்த பறவைக்கு
பாரமானது
சிறகுகள் !
 


kalyan.ubi@gmail.com