காதலுக்கு இல்லை ?!
விஜயன் ஜெபமணி
காதலுக்கு தேசமில்லை
பச்சை அட்டை குடியுரிமை பெற்றுத் தந்தால்
நீதான் என் மனைவி ஷகண்|ணே !
காதலுக்கு கண்ணில்லை
சிவப்பழகு சாதனம் இருமாதம் உபயோகி
நீதான் என் பெண்ஷசாதி| !
காதலுக்கு சாதியில்லை
அரசு வேலை அட்டவணை பட்டியலிலிருந்தால்
நீதான் இல்லத்தரசி சம்ஷமதம்| !
காதலுக்கு மதமில்லை
என் மதத்திற்கு நீமட்டும் மாறிவிட்டால்
நீதான் என் ஷகாம|கிழத்தி !
காதலுக்கு காமமில்லை
நேற்றிரவு தேகம் பகிர்ந்த வாடகைப்பெண்
எந்த தேசம், சாதி, நிறம், மதம் ?!
jvijayan1961@yahoo.com
|