சொல்லவே இல்லை

கவிஞர் இரா .இரவி
 



வீட்டு மனை விற்றபோது
பேருந்து நிலையம் மிக அருகில் என்றனர் !
தொடர்வண்டி நிலையம் வெகு அருகில் என்றனர் !
பள்ளிக்கூடம் மிக பக்கத்தில் என்றனர் !
மருத்துவமனை கூப்பிடு தூரத்தில் என்றனர் !
ஆனால் ஏரியின் மீதுதான் மனையடி
என்பதை சொல்லவே இல்லை !