துளிப்பா தூறல்கள்
கவிமுத்து
துகிலுரித்ததால் கண்ணன்
வரவி்ல்லை கண்ணீரே
வந்தது! வெங்காயம்.
கரைபுரண்ட வெள்ளம்
கவிஞர்க்கும் தந்தது!
அழகிய கவிதை.
விதை மண்ணில் வீணாகுமென்று
மழை வந்து உயிர் தந்த்தோ?
தொடர் மழை.
வெகு நாள் விடுமுறை
வெயிலுக்கும் ஆனது!
தொடர்மழை.
எதை கொண்டும் அழிக்க முடியாத
பெரும் பிழையை கழுவிச்சென்றதோ?
தொடர்மழை.
கண்னெதிரே வேறுபாடு
கடவுளும் சிரிக்கிறார்!
சிறப்பு வழி தரிசனம்.
கோலப்புள்ளியா?
கோளப் புள்ளியா?
நட்சத்திரங்கள்.
விளையாத நிலத்தில்
விழுந்த விதைகள்!
மழைத்துளி.
நில் கவனி
செல்லும் முன்!
மழை.
கரும்பலகையில்
வண்ண ஓவியம்!
கூந்தலில் மலர்.
|