பயணம

காரைக்குடி பாத்திமா ஹமீத் ஷார்ஜா
 

ஒருகோடி அணுக்களுடன் உல்லாசமாய்த்  தொடங்கி
உடன்வந்தோரை விட்டுவிட்டு
வெற்றிபெற்றது ஒருகருவின்
பயணம்!

ஆகாயவிண் வெளியில்
அன்றாடம் வந்துமறையும்
அம்புலியில் காலூன்றியது
ஆர்ம்ஸ்ட்ராங்கின் பயணம்!

கடல்நீரில் தொடங்கி
அலைகளுடன் போராடி
அமெரிக்காவைக் கண்டது
கொலம்பஸின் பயணம்!

அன்பால் அணைத்து
அகம்குளிர உணவளித்து
ஆனந்தம் தந்தது
அன்னைதெரெசாவின்
பயணம்!

தீண்டாமையால் பாதித்தோர்
தலைநிமிர்ந்து வாழவைத்தது
அனைவரையும் சம்மாக்கியது
அம்பேத்காரின் பயணம்!

இலக்கில்லாத நம்பயணங்கள்
நல்குறிக்கோளில் முடியட்டும்!
இலட்சியமுடன் நம்பயணம்
உலகில் ஆட்சிசெய்யட்டும்!


fathima1403@gmail.com