'கலைமாமணி’
திரையுலக
பிரம்மா எஸ்.பி.முத்துராமன்
கவிஞர்.ப.கண்ணன்சேகர்
ஏப்ரல்
-07,
எஸ்.பி.முத்துராமன்
பிறந்த
தின
கவிதை !
மடமைகள்
எதிர்க்கும்
மாபெரும்
மண்ணில்
மாபணி
ஆற்றிடும்
மகிழும்
குடும்பம்!
சுடர்விடும்
திராவிடம்
சூழ்ந்திடும்
மரபில்
சுப்பையா
பெற்றெடுத்த
சுபமுத்து
ராமன்!
திடமென
கருதி
திரையினில்
நிலைக்க
தினமொரு
கனவை
தெளிவாய்
கண்டார்!
கடமையை
கற்றிட
கவியரசு
தென்றலில்
கருத்தென
பணிதனை
கண்ணெனக்
கொண்டார்!
மெய்யப்ப
செட்டியார்
மேவிய
அரங்கில்
மெச்சிடும்
வகையில்
மேம்பணி
செய்தார்!
கைவண்ண
இயக்கம்
கனிமுத்துப்
பாப்பா
கண்டதோ
வெற்றி
கனிவெனக்
கொய்தார்!
பொய்யிலா
திரையை
புனிதமாய்
கருதி
பொலிவுற
உழைத்து
புதுமைகள்
செய்தார்!
வையகம்
காணாத
வெற்றியைக்
கண்டு
வரலாற்று
ஏட்டில்
வளமாய்
உய்தார்!
மேடையில்
மலரும்
மெல்லிய
பேச்சால்
மேகப்
பொழிவாய்
மீட்டுவார்
குறளை!
ஆடையில்
வெண்மை
அணிவார்
தினமும்
அதுதான்
காட்டும்
அவரின்
குணமும்!
ஓடையில்
நீர்ரென
ஓயாத
உழைப்பில்
உலவிடும்
திரையின்
ஒப்பற்ற
பிரம்மா!
கோடையிலும்
வற்றா
கொள்கைத்
தமிழே
கும்பிட்டு
வணங்கி
வாழ்த்தினோம்
உமையே!
9894976159.
|