நாளையில்
நம்பிக்கைஊன்றி
மானியூர்
மைந்தன்
காலங்காலமாய் தமிழினத்தின்
கலக்கம் தீரவில்லை
ஆட்சிகள் மாறும் போதும்
அவலங்கள் நீங்கவில்லை
அன்னைத்தீவினிலே
அகதியாகும் ஆற்றாமைக்
கொடுமை இன்னும் குறையவில்லை
போதும் போதும்
அழுததும் போதும்
தொழுததும் போதும்
குருதிவழிய நாம்
அழிந்ததும் போதும்
சொந்தங்களின் உயிர்ஓலம்
இதயத்தில் ஓங்கி ஒலிக்கிறதுஇன்னும்
பொழுது விடியுமென்று
நாளையின் நம்பிக்கையோடு
நிம்மதி கொள்வோம்
navaas06@yahoo.de
|