புரட்சிக்கவிஞர்
(ஏப்ரல் 29 பாவேந்தர்
பாரதிதாசன் பிறந்த தினம்)
கவிஞர்
இரா .இரவி
புதுவையின்
புதுமை
பகுத்தறிவின்
செழுமை
புரட்சிக்கவிஞர் !
குடும்பவிளக்கு
ஏற்றிய
கவிதைச்
சுடர்
புரட்சிக்கவிஞர் !
அன்றே
உரைத்தவர்
அளவான
குடும்பம்
புரட்சிக்
கவிஞர்
!
பெரியாரின்
போர்
முரசு
பார்
போற்றும்
பா
அரசு
புரட்சிக்
கவிஞர்
!
தமிழை
நேசித்தவர்
தன்னுயிருக்கும்
மேலாக
புரட்சிக்
கவிஞர்
!
மகாகவி
பாரதியை
மதித்தவர்
மட்டற்ற
கவிகளை
வடித்தவர்
புரட்சிக்
கவிஞர்
!
சங்கநாதம்
முழங்கியவர்
சங்கத்தமிழ்
வளர்த்தவர்
புரட்சிக்
கவிஞர்
!
கனக
சுப்பு
ரத்தினம்
கவிதைகள்
யாவும்
ரத்தினம்
புரட்சிக்
கவிஞர்
!
சூழ்ச்சிகள்
கழித்து
எழுச்சிகள்
விதைத்தவர்
புரட்சிக்
கவிஞர்
!
அஞ்சாத
சிங்கம்
பாடல்கள்
தங்கம்
புரட்சிக்
கவிஞர்
!
|