முதல் காதல்

ஆனந்தி ராமகிருஷ்ணன்


 

பின்னிரவில் உன்னை மட்டுமே
முன்னிருத்தி வந்த கனாவிலும்,
வனாந்திரத்தின் தனிமையிலும்,
எதிர்வரும் பிம்பங்கள்
உன் சாயலில் கடக்கையிலும்,
மார்கழி நாளில் சன்னலோர வரம்
கிடைக்கும் நிமிடங்களிலும்,
திரைப்படமொன்றில் பால்ய பருவ காதல் காட்சிகள் காண நேரிடுகையிலும்,
உன் பெயர் தாங்கிய கடையொன்றின்
பெயர் பலகையில் தற்செயலாய்
கண்கள் நிலைக்குத்தி நிற்பதிலும்,
சில கணங்கள் வாழ்த்துவிட்டு தான் போகிறது.
அந்த "முதல் காதல்"....



Anananthi.ramyaa@gmail.com