மனிதநேயம்
கமலினிகதிர்
மனிதநேயம்
மரணித்த புவியினிலே
மரணதேவனுக்கு வாரிக்கொடுத்துவிட்டு
விதி இதுதானென்று ஏற்க முடியாமல்
தம்விதி முடியுமட்டும் மூச்சுவிடுகின்றார்
புண்களும் ரணங்களும் தாறுமாறாய்
வலிக்கும் எண்ணங்களுடன்
நெருப்பிலிட்ட புழுவாய்த் துடித்து
ஆழ்கடல் துரும்பாய் அல்லாடுகின்றார்
கும்பிட்ட தெய்வமெல்லாம்
துாரமாய் ஓடி விட இன்று
கண்ணீர்க்கடலில் அவர்கள்
மூழ்கியுமே நிற்கின்றார்கள்
ஜீவனை விட்டு ஜீவசக்தியாய் கலந்திட்ட
ஜீவாத்மாக்களை எண்ணியெண்ணி
ஜீரணிக்க முடியாமல் தினமும்
துடிதுடித்து நிற்கின்றனர்
துன்பஓலங்களில் தம்மை மூழ்கடித்து
துயரவெள்ளத்துள் துக்கம் கரையாமல்
துயரெதுவும் தீராமல்
துறவிபோல் நிற்கின்றனர்
ஓலமிட்டு அழுவதனால்
ஒன்றுமே மாறவில்லை
இறப்புக்களெல்லாம் இறந்தகாலங்களாய்
தவிப்பு மட்டுமே நிகழ்காலங்களாய்
மண்ணுக்காய் தங்கள் உயிரைவிட்ட
மாவீரர்களின் பெற்றோர்
வெறும் நினைவுப் புக்களுடன்
வெறுமையாய் வாழுகின்றார்.
kamalini.kathir@yahoo.com
|