மனைவி...
முனைவர் பூ.மு.அன்புசிவா
நான் தேடிச்சுற்றிய
பத்தாவது கிரகம்
ஓடித்திரிந்த
ஒன்பதாவது திசை
எழுதி மகிழ்ந்த
எட்டாவது ஸ்வரம்
மகிழ்ந்து ருசித்த
ஏழாவது சுவை
என் அணுவிலும் கலந்த
ஆறாவது பூதம்
ஆசையாய் நான் படித்த
ஐந்தாவது வேதம்
நல்லதையே சொல்லும்
நான்காவது காலம்
நல்வழி காட்டிய
மூன்றாவது விழி
என்னை வளர்த்த
இரண்டாவது தாய்
எல்லாம் ஆகிய
என் மனைவி.
anbushiva2005@gmail.com
|