ஹைக்கூ
மா.ஷங்கர்
பற்றாக்குறையால் தொய்வு
விரைவில் தீர்த்த நிதியமைச்சர்
மகனின் மாளிகைப்பணி
பார்வையிடுகிறார்
சுகாதாரத்துறை அமைச்சர்
மூக்கை கையால் பிடித்து
ஆங்கிலத்தில் செய்தி
கூறச்சொன்னார் தமிழில்
கல்வி அமைச்சர்
திரும்பிச் சென்றார்
போக்குவரத்து அமைச்சர்
சாலை சரியில்லாததால்
காவல்நிலையம் சென்று
குற்றவாளியை விடுவித்தார்
சட்ட அமைச்சர்
வழங்கப்பட்டது
விழிப்புணர்வு பேரணியில்
கலப்பட உணவு
குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு தின உறுதிமொழி
பங்கேற்ற சிறுவர்கள்
நெகிழி ஒழிப்புப் பிரச்சாரம்
அனைவர் கையிலும் இருந்தது
பாக்கெட் குடிநீர்
மரணதண்டனை எதிர்ப்பு
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்
கொலைகாரனின் மனைவி
மது ஒழிப்புப் போராட்டம்
உற்சாகத்துடன் வந்திருந்தார்
தள்ளாடியபடி
suxus1@gmail.com
|