ஹைக்கூ கவிதைகள் ...........

கா.ந.கல்யாணசுந்தரம்



கொஞ்சம் வண்ணங்களும்
தூரிகையும் போதும் ...
நிஜங்களின் அடையாளம் காண !

சாயம் பூசிக்கொள்ளவே
விரும்புகிறது...
அந்தி வானம் !

ராஜ அரிதாரம் கலைத்து
உறங்க சென்றான்...
குடிசைக்குள் !

ஏழு வண்ணங்களோடு
கருமேகமும் வேண்டும்
வானவில் வரைய !

இத்தனை வண்ணங்களைச் சுமந்து
எப்படி பறக்கிறாய் ?
வண்ணத்துப் பூச்சியே !

திருவிழாவில் எனக்கு
புலிவேஷம் வேண்டும்...
போலிகளின் முகத்திரை கிழிக்க !
 



kalyan.ubi@gmail.com