|
ஹைக்கூ கவிதைகள்
கவிஞர். தக்ஷன், தஞ்சை
யார் வரைந்தது வானில்
தலைகீழாய் பாரதி மீசை
ஓ! சிறகு விரித்த பறவை!
_________________
என்று திருமணம்
அதற்குள் சீதனமாய்...
முதிர்கன்னி தலையில் நரை!
_________________
வெட்டப்பட்ட மரம்
விட்டுச் செல்கிறது
வடுக்களை மட்டும்!
__________________
மூங்கில் வெட்டியை
துளைத்தெடுக்கிறது
புல்லாங்குழல் இசை!
__________________
கூலி உயர்வுக்கு கடிதம்
தட்டச்சு செய்தவனிடம்
பேரம்!
__________________
என்ன நடந்ததோ இரவு
அதிகாலையிலேயே குளியல்
பனியில் நனைந்த ரோஜா!
dhakshanhaiku@gmail.com
|
|
|
|