தேடல்

தணிகை.ஜெ

அங்குமிங்குமென
அலைந்துகொண்டிருக்கிறது
நாயொன்று..

அது
இரைதேடலுக்கு அல்லது
இச்சைதேடலுக்கென
சுற்றித்திரியலாம்..

தேடல்களின்
எதிர்ப்பார்ப்புகள்
சிலநேரங்களில் கிடைத்தும்
சிலநேரங்களில் கிடைக்காமலும்
போகலாம்..

தொலைந்து போன
அல்லது
தொலைக்கப்பட்ட
எதாவதொன்று ஒவ்வொரு
தேடலிலும் குறுக்கிடத்தான் செய்கிறது..

இன்னுமின்னுமென
நாய் சுற்றிக்கொண்டே இருக்கிறது...


parattai4u@gmail.com