வேட்டி தினம் - ஜனவரி – 6

.கண்ணன்சேகர, திமிரி
 



மிழனின் பன்பாட்டில் தரித்திடும் ஆடையென
   
தனித்துவ அடையாளம் தருவதும் வேட்டிதான்!
உமிழ்ந்திடும் வெண்மையால் உடலுக்கு ஆரோக்கிய
     
உயர்வினை காண்பது உடுத்திடும் வேட்டிதான்!
அமிழ்ந்திட பொய்மைகள் அரங்கினில் அணிந்திட
     
அரசாங்கம் சட்டத்தின் அதிகாரம் வேட்டிதான்!
திமிங்கல முதலைகள் தென்னவர் பன்பாட்டை
     
தீர்த்திட முனைந்தாலும் தேயாது வேட்டிதான்!

அரசரும் புலவரும் அன்றாட உடையென
     
ஆன்மீக பக்தரும் அணிவது வேட்டிதான்!
மரபுவழி தொடர்ந்திட மாறாமல் அரசியலில்
     
மாபெரும் தலைவரும் மதிப்பது வேட்டிதான்!
பரம்பரை விழாவென பண்டிகை காலத்தில்
     
பட்டொடு உடுத்திட பளிச்சிடும் வேட்டிதான்!
உரமிட்டு உழுபவனின் அரையாடை காட்சியால்
     
உத்தமர் காந்திமகான் உடுத்தியது வேட்டிதான்!

மிடுக்குடன் மணவாழ்வை மேதினியில் தொடங்கிட
       
மீட்டிடும் சுகம்தரும் மெண்மையாய் வேட்டிதான்!
விடுதலை இந்தியாவில் வெள்ளையர் நாகரீகம்
     
விடியாத மோகத்தால் வீழ்ந்திடுமா வேட்டிதான்!
இடுக்கன் நேரத்திலும் இனியதொரு உவமையாய்
       
உடுக்கையென வள்ளுவன் உணர்த்தியது வேட்டிதான்!
தடுப்பவர் யாருமில்லை தமிழனாய் வாழ்ந்திட
       
தரணியில் அணிந்திடு தினசரி வேட்டிதான்!

 

 


.கண்ணன்சேகர், திமிரி :9894976159.