ஆடாதோடை
ப.கண்ணன்சேகர்
மூலிகை
பேசுகின்றன
- 1
ஆடாதோடை
யினாலே
பாடாத
நாவும்பாடும்
நாடாது
வியாதியென
நற்சித்தர்
பாடியுள்ளார்!
கேடாக
வந்தநோயும்
கிளம்பியே
ஓடிப்போக
கேடிலா
மருந்தென
கிராமத்தார்
நாடியுள்ளார்!
தேடாது
அருகாமையில்
தினந்தோறும்
பார்த்திட
தெருவாசல்
வேலியிலும்
தழைத்திடும்
மருந்தாகும்!
மூடாத
கதவென
முன்னோர்கள்
சொல்லியது
மூலிகை
பயன்பாடே
முக்கிய
விருந்தாகும்!
பாரினில்
வந்திடும்
பலவேறு
நோய்களும்
பயன்படுத்த
ஆடாதோடா
பட்டென
குணமாகும்!
மாரியின்
கொடைப்போலே
மருந்தென
இலைச்சாறு
மார்புசளி
இருமலும்
மறைந்திட
பயனாகும்!
நாறிடும்
படைத்தேமல்
நலமெனக்
கண்டிட
நாள்தோறும்
கசாயம்
பருகிட
பலனாகும்!
வேரிலும்
மருத்துவம்
வியாதியை
கொன்றிட
விவரங்கள்
தெரிந்திடு
வாழ்வெலாம்
நலமாகும்!
அரைப்படி
தண்ணீரில்
ஆடாதோடா
இலைப்போட்டு
அடுப்பினில்
காயவைத்து
அதோடு
தேன்கலந்து
முறைப்படி
நீஅருந்து
முற்றிய
காசநோயும்
முன்னேற்றம்
காணாது
முடங்கியே
போயிடும்.
வரைமுறை
கொண்டுநீ
வாழ்க்கையை
நடத்திட
வரும்நோய்
தடுத்திடும்
வளமான
வைத்தியம்!
கறையிலா
ஆரோக்கியம்
கண்டிடும்
சித்தமே
கண்கண்ட
மூலிகையை
காத்திடு
நித்தமே!
ப.கண்ணன்சேகர்.
தலைவர்.
ஸ்ரீபுற்று
மகரிஷி
இலக்கிய
அணி,
வேலூர்.
செல்
9894976159.
kannansekarp@gmail.com