தமிழ்தருங் காலம் தரணியில் மீண்டும் பூக்கும்!

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

லைவளம் முற்றி னார்க்குக் கலைவந்து பாடும்
           
கனிவான கீதம் அதுவாய்
உலைநிலம்
பொங்கு மாப்போல் உயிர்வந்து துள்ளி
           
உறவாகி நிற்கும் மழைபோல்
அலைவழி
போகு மாங்கு அலைபட்டு ஓடி
           
அகலாது சுற்றுந் தடியாய்
நிலவழி
கவிதை ஆறு நிலைகொள்ளு மாடல்
           
நிகழ்வாக மாறும் அறிவாய்!

சதிரெனக் கோவில் தோறும் சங்கீத மாகுஞ்
           
சத்தான வுரைகள் தன்னால்
அதிரடி
வாதம் மோதும் அரங்காட லோடும்
           
அழகான விழாக்க ளின்பால்
புதிர்படப்
பேச்சு மன்றம் புயலாடுங் கவிதை
           
பொழிலாகி மாறுங் கதிர்போல்
வதிவிடம்
பெற்று வாழ்ந்தும் வகையேது மின்றி
           
வழிமாறி விட்ட(து) அம்மா!

இருப்பிலே யிருந்து பற்றி இனமென்று வாழும்
           
எதிர்காலம் ஒன்று வேண்டும் 
பொருப்பிலே
ஏறி நின்று புதுசாகக் காணல்
           
பிழிபாடு மட்டு மில்லை
நெருப்பிலே
வந்த பின்னால் நிழலாகத் தேடி
           
நிலங்காண முடியா தப்பா!
பருப்பது
வேகா தப்பா பகைமீண்ட பூமி
           
படைப்பாக்கும் தமிழே யாகும்!

ஆளொரு கதையே சொல்வர் அனலான தெங்கள்
           
அழகான மொழியிற் பின்னும்
வாளொரு
கையிற் புக்காய் வளமாடுங் காட்டில்
           
வகைசொல்லும் காப்பி யங்கள்!
நாளொரு
படியே கொண்ட நறுமேனித் தமிழே
           
நமதாக்கும் கவிதை என்பேன்!
மீளொரு
தமிழைப் பேசி முத்தாடுங் கிள்ளை
           
மொழியாக வருமே யென்பேன்

குறளினைப் பழகத் தொல்காப் பியத்தொடுங் கற்கும்
           
குழந்தைகள் புதுசாய்ப் பிறப்பர்
அறமென
இன்று பூக்கும் அறிவான கூட்டில்
           
அடுக்கென்று உலகந் தோன்றும்
திறமெனச்
சொல்பொன் னாடல் தெரிந்தாடும் முத்துச்
           
சிந்தாடுங் கலைகள் ஓங்கும்
பறவைகள்
போலுங் கற்கப் படியேறுங் காலம்
           
பற்றோடும் தமிழே தருமே

 

வாய்ப்பாடு: விளம் மா மா காய் மா காய் மா மா

 

vela.rajalingam@gmail.com