நானொரு கனாக்கண்டேன்! 

சண்முகபாரதி




னாக் காணும்
சுதந்திரம்
பறிக்கப்படாத ஓர் இரவில்

நானொரு
நல்ல கனாக்கண்டேன்

30 ஆண்டு கால
உயிர்வலி அகலும் அற்புதம்

ஓடிப்போய்........
ஓடோடிப் போய்
ஊர் சேரும் நாள் விடிவு

எங்கள் வீடு
அப்படியே இருக்கிறது...
30 ஆண்டுகள் முன்
அப்பா அம்மா தங்கைச்சி
நான் வைத்த
தென்னை மரங்கள்
மா பலா எல்லாமே
கொத்துக் கொத்தாய்
பூத்துக் காய்த்தபடி....
அப்பம்மா காலத்து
பனையெல்லாம்
அழகு குலையாமல்
நிமிர்ந்தபடி வரவேற்க
ஆனந்த கண்ணீரால்
வீடு கழுவி
'அப்பனே' என்று
மீள குடி புகுந்தோம்..

வீடு பிரிந்த அன்றே
தொலைந்து போன அப்பாவும்
வீடு.. வீடு.. என்றபடி
போய்விட்ட அம்மாவும்
எங்கள்
அம்பிகையை அணைத்து கொஞ்சும்
அற்புதமும் உடனிகழும்

மீண்டும் எங்கள்
வீரபத்திரன் கோயில்
மணியோசையும் கேட்கும்

ஊரெல்லாம் கூடி
மடைபரவி
ஊஞ்சல் பாடி

நேற்றுவரை
மனசுக்குள் துடித்த
எங்கள்
வசந்தன் நாடகத்தை
செம்மண் புழுதி கிளம்ப
ஆடி உயிர்ப்படைந்தோம்!

வீரபத்திரா!
என்
நல்லாட்சிக் கனவை
நனவாக்கமாட்டாயா.....


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்