காலத்தின் கோலம்

மணிமாலா மதியழகன்

னி எல்லாம் இப்படித்தான்
என்றாகிப்போனதோ காலம்!

தாலாட்டும் இன்று மறந்துபோய்
தாயவளின் சீராட்டும் அருகி
அழும் குழந்தைகளின் கரங்களில்
செவ்வகக் கருவிகள் திணிக்கப்படுவதால்
எதற்கழுதோமென்ற நினைவின்றி
ஏதேதோ காட்சிகளில்
தம்மை மறக்கும் தளிர்கள்!

சின்னஞ்சிறு குழந்தைகளின் கைகளிலும்
சிரித்துக்கொண்டு கைபேசிகள்!
இதை காலத்தின் கோலமென்பதா
தொழில்நுட்பத்தின் தொல்லை என்பதா?

சிந்திக்க மறந்தச் செல்வங்கள்
செய்வதறியாது போனதால்
மந்தமாக மாறும் அவலமும்
மண்ணில் அரங்கேறவும் செய்கின்றனவே!

திறன்பேசிகளின் வரவு அதிகரிக்க
மனிதர்கள் தங்களிடமுள்ள
திறன்களை மறந்தது போதும்!
வருங்கால தலைமுறையினர்
வாழ்வில் வசந்தம் ஏற்பட
கைபேசிகளைப் பெற்றோர் சற்று
கைவிட்டு மழலைச் செல்வங்களுடன்
உரையாடி மகிழலாமே!


 




 

் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்