அகதிக்கு உதவிடும் அஞ்சிடா வஞ்சியே
தேசபாரதி தீவகம்
வே.இராசலிங்கம்
கன்னற்
கனடா மயிலே
காதலால் உன்றனுக் கானேன்
பின்னற் பரப்பிற் புயலாய்
போரிலும் பேயதும் மண்டிச்
சன்னப் பழுவாய் அகதிச்
சாவிலும் வதையது மாக
என்னில்; உனக்கே யுரித்தாய்
ஏட்டினைக் காத்தனை எந்தாய்!
அன்ன உலகில் அகதி
ஆர்விதி மானிடத் துள்ளே
சொன்ன மனுவின் னிருபத்
தொன்றெனும் நாடுக ளுள்ளும்
அன்னை கனடா மதிக்கும்
அட்டியில் நான்கென ஆனாய்!
என்னை எடுத்தாய் மகளே
என்றனுக் காருயிர் இட்டாய்!
வைய்ய மகில மனைத்தும்
வாரிடு மாண்டொவ் வொன்றும்
மெய்யு மிரண்டும் அரையாம்;
மேற்குமி லட்சமாய்க் கொண்டாய்!
செய்ய வரிப்பு லகத்தே
தேவிநீ மானிடம் வென்றாய்!
அய்ய மெதுவும் இலையே
அஞ்சிடா வஞ்சியே அம்மா!
அய்நா உரிமை அமைப்பு
ஆகிய உன்னுடன் அட்டி
மெய்நா வுரைக்கும் விதமாய்
மீட்டினை ஏற்றனை அம்ம
பொய்ஏர் வரைவும் பொறியும்
போன்றவ ருள்ளிடாப் பூவே
உய்வார் தனக்கார் உவப்பே
ஊடகம் போற்றிடுந் தேவி!
தன்னார் வமைப்பும் அடைக்க
லத்துமாய்த் தொண்டெனுந் துன்னல்
பின்னுங் கனடாப் புவியே
பேதையுந் தோய்தரு துன்பம்
மன்னுக் கிலையாய் மகிழ்வாய்
மானிடக் காரிடுங் காற்றே
என்னப் பொழிவாய் இயலே
இன்பமுத் தாடிடும் ஈர்ப்பே!
துன்னல்-தையல்
வாய்ப்பாடு: அரையடி ஒவ்வொன்றும் வெண்டளை உடையது,
வரியொன்றில் பதினாறு எழுத்துடையதுமாகும்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்