உயிரை உரமாக்கி வளர்த்த பயிர்…

சண்முக பாரதி

யிரை உரமாக்கி வளர்த்த பயிர்…
கருகவிடலாமோ சுதந்திரப்பயிர்…
ஆசைக்குயிலே-மழை வர
பாடு குயிலே…
உன்னுடைய பாடல்களை
யார் பாடக்காத்திருக்காய்
ஆசைக்குயிலே-மழை வர
பாடு குயிலே…
கண்ணீரால் பயிர் காத்த
காலங்களை ஏன் மறந்தாய்
ஆசைக்குயிலே-மழை வர
பாடு குயிலே…
நீ உயிர்க்கும் காலம் வரை
நிலை மாற வழியுமில்லை
நீ மட்டும் விழித்துவிட்டால்
நிகராக ஏதுமில்லை
ஆசைக்குயிலே-மழை வர
பாடு குயிலே…



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்